போலீஸ் செய்திகள் தேனி
மண் திருடிய மூவர் கைது
தேனி : பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் சத்திரபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் பகுதியில் முல்லை பெரியாற்றில் 3 மாட்டு வண்டிகளில் சுமார் கால் யூனிட் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். மணல் திருடிய வீரபாண்டி சங்கிலிகருப்பு, ஈஸ்வரன், முகில் வண்ணன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, மாட்டு வண்டிகள், மணலை கைப்பற்றினர்.
விபத்தில் காயம்
தேனி : போடி காமராஜபுரம் ஐயப்பன் 45, தேனியில் துணிக்கடையில் பணிபுரிகிறார். பணிமுடித்து மதுரை ரோட்டில் நடந்து சென்றார். பழைய ஸ்டாண்ட் அருகே சென்ற போது, போடி சீனிமுகமது நகர் மனோரஞ்சித் ஓட்டி வந்து கார் மோதியது. காயமடைந்த ஐயப்பன் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
தேனி : வீரபாண்டி கிழக்கு தெரு ராசையா 67. ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் திண்டுக்கல்-குமுளி ரோட்டில் டூவீலரில் சென்றார். இவரது டூவீலர் மீது அனுமந்தம்பட்டி வேதநாயக்கர் தெரு மனோஜ்குமார் 27, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இந்த விபத்தில் ராசையா உயிரிழந்தார்.
இவரது மனைவி பூங்கோதை புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!