கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார் : கடலுார் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில், புயல் சின்னத்தை குறிக்கும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கத்தரி வெயில் வீசி வருகிறது. கத்தரி வெயிலின் போது கோடை மழை பொழிவது வழக்கம். இந்த ஆண்டில், தற்போது அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில், துாரத்தில் புயல் சின்னம் இருப்பதை குறிக்கும் வகையில், 1ம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.

Advertisement