2 நாள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

காந்தி நகர்: குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ரூ-82,950 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மே 26ம் தேதி கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு, ரூ.53,414 கோடி மதிப்பிலான 33 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்களின் மூலும், குட்ச், ஜாம்நகர், அம்ரேலி, ஜூனாகத், சோம்நாத், அஹமதாபாத், மஹிசாகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைய உள்ளனர்.
தொடர்ந்து, ஹரோட் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரயில்வே உள்பட பல துறைகளின் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மே 27ம் தேதி காந்திநகரில் உள்ள மஹாத்மா மந்தீரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,006 கோடியில் கட்டப்பட்ட 22,000 குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். காந்திநகரில் உள்ள யூ.என்., மேக்தா இருதயவியல் கல்வி நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார். இதேபோல, பல திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.