சட்டவிரோதமாக தங்கிய மியான்மரை சேர்ந்த 3 பெண்கள் உ.பி.,யில் கைது

உன்னாவ்: உ.பி., மாநிலம் உன்னாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் இன்று உ.பி., மாநிலம் உன்னாவில், மியான்மர் நாட்டை சேர்ந்த மூன்று பேர் தங்கியிருந்தவர்கள் கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கங்கா காட் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் கஜேந்திர சிங் கூறியதாவது:

கடந்த மே 22 அன்று கங்கா காட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட மனோகர் நகர் பகுதியில் கங்கா நதிக்கு அருகிலுள்ள குடிசைகளில், வசிக்கும் சில நபர்கள் உள்ளூர் மொழியைப் பேசத் தெரியாதவர்கள் குறித்து தனக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வுக்கு சென்றபோது அங்கு சில பெண்கள் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்தனர். அவர்கள் இந்தியாவில் நுழையவோ அல்லது தங்கவோ அங்கீகரிக்கும் எந்த செல்லுபடியாகும் ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. விசாரணையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த அந்த 3 பெண்களை கைது செய்தோம். இவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு கஜேந்திர சிங் கூறினார்.

Advertisement