ஸ்ரீகாந்த் 2வது இடம்: மலேசிய பாட்மின்டனில்

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2வது இடம் பிடித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங் மோதினர். முதல் செட்டை 11-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 9-21 என கோட்டைவிட்டார். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 11-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், ''இத்தொடரில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்தது. சாம்பியன் பட்டம் வெல்ல முடியாதது ஏமாற்றம்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுட்டுப் பிடித்த கொள்ளையனிடம் சங்ககிரி மாஜிஸ்திரேட் விசாரணை
-
கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது
-
காந்தி பொது சேவை மையத்தில் மரக்கன்று நடவு
-
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை: உள்ளூர் மாணவர்களுக்கு முக்கியத்துவம்; பெற்றோர் எதிர்பார்ப்பு
-
டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது
-
நகராட்சி,கொம்யூன் ஊழியர்கள் பல கட்ட போராட்டம் நடத்த முடிவு
Advertisement
Advertisement