குஷ் மைனி 'சாம்பியன்': 'பார்முலா-2' கார்பந்தயத்தில்

மொனாக்கோ: மொனாக்கோ 'பார்முலா-2' கார்பந்தயத்தில் இந்தியாவின் குஷ் மைனி சாம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு ஆண்டின் 'பார்முலா-2' கார்பந்தயம் 14 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 5வது சுற்று மொனாக்கோவில் நடந்தது. இதன் 'ஸ்பிரின்ட் ரேஸ்' பிரிவில் இந்தியாவின் குஷ் மைனி, 'டாம்ஸ் லுாகாஸ் ஆயில்' அணி சார்பில் பங்கேற்றார். பந்தய துாரத்தை 44 நிமிடம், 57.639 வினாடியில் கடந்த குஷ் மைனி, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மொனாக்கோ 'பார்முலா-2' போட்டியில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் குஷ் மைனி. இது, 'பார்முலா-2' கார்பந்தயத்தின் 'ஸ்பிரின்ட் ரேஸ்' பிரிவில் இவர் வென்ற 2வது சாம்பியன் பட்டம். ஏற்கனவே 2014ல் ஹங்கேரியில் நடந்த போட்டியில் 'இன்விக்டா ரேஸிங்' அணி சார்பில் கோப்பை வென்றிருந்தார்.
பெங்களூருவில் பிறந்த குஷ் மைனி 25, கடந்த 2023ல் முதன்முறையாக 'பார்முலா-2' போட்டியில் 'காம்போஸ் ரேஸிங்' அணிக்காக பங்கேற்றார். பின் 2024ல் 'இன்விக்டா ரேஸிங்' அணியில் இணைந்த இவர், தற்போது 'டாம்ஸ் லுாகாஸ் ஆயில்' அணிக்காக விளையாடுகிறார். சமீபத்தில் இவர், 'பார்முலா-1' போட்டியில் பங்கேற்கும் 'ஆல்பைன்' அணியின் 'ரிசர்வ் டிரைவராக' ஒப்பந்தமானார்.

Advertisement