கண் பரிசோதனை முகாம்

வேடசந்தூர்: கல்வார்பட்டி ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் கல்வார்பட்டி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமினை அறக்கட்டளை தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தார். கண் பரிசோதனை, சர்க்கரை நோய், கிட்ட, தூரப்பார்வை, கண்புரை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பரிசோதனை நடந்தது. பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமில் காசிபாளையம், கால்வார்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.

Advertisement