வளத்தியில் பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

செஞ்சி : வளத்தியில் பா.ஜ.,வினர் தேசிய கொடியேந்தி செந்துார் ராணுவ தாக்குதல் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் மற்றும் பாக்கிஸ்தான் மீது இந்தியா ராணுவம் நடத்திய சிந்துார் தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய படைக்கு நன்றி தெரிவித்து, வளத்தியில் மேல்மலையனுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பிரசன்னா வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் தீனதயாளன், விவசாய பிரிவு சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் பாண்டியன், பொருளாளர் மணி, நிர்வாகிகள் வினோத், திவ்யா, அஜித் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் சேத்பட் ரோடு, வார சந்தை வரை சென்று, மீண்டும் வளத்தி காவல் நிலையம் எதிரில் நிறைவு பெற்றது.

Advertisement