3 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே புங்கம்பட்டியை சேர்ந்-தவர் நாகராஜ். இவர் மகள் ஹர்சிதா, 20. தர்மபுரி தனியார் கல்லுா-ரியில், பி.பி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த ஒரு மாத-மாக, கிருஷ்ணகிரி திருமலை நகரில் உள்ள சவிதா, 24, என்பவ-ரது வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 23ம் தேதி காலை, 7:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். சவிதா புகாரில், தர்மபுரி அருகே மதிகோன்பாளையத்தை சேர்ந்த சத்-யராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. பிளஸ் 1 முடித்துள்ளார். கடந்த, 21ல் நள்ளிரவு, 12:30 மணிக்கு வீட்டிலி-ருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த புகழேந்தி, 21, மீது சந்தேகம் இருப்ப-தாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டியை சேர்ந்தவர் ராம்ராஜ். இவ-ரது மனைவி ரம்யா, 23. இவர்களுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. உடல்நிலை சரியில்லாததால் அவதா-னப்பட்டியிலுள்ள தன் தாய் வீட்டில் கடந்த, 2 மாதமாக ரம்யா தங்கியிருந்தார். கடந்த, 22 மதியம், 2:00 மணிக்கு, குழந்தை-யுடன் வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை மாரி-யப்பன், 43, கே.ஆர்.பி., அணை போலீசில் கொடுத்த புகாரில், அவதானப்பட்டியை சேர்ந்த சுந்தரேசன், 25, மீது சந்தேகம் இருப்-பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர் அருகே குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் செல்வம் மகள் ஷாலினி, 20. ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.காம்., முதலா-மாண்டு படிக்கிறார். கடந்த, 23 ம் தேதி நண்பகல், 12:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார்படி, ஓசூர் ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement