வீட்டு பால்கனி விபத்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

சென்னை, சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், திடீரென ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து பால்கனி மற்றும் படிக்கட்டுகள் இடிந்து விழுந்தன; மூன்று பேர் காயமடைந்தனர். இது, மெட்ரோ ரயில் பணிகளால், அதிர்வுகள் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று அளித்துள்ள விளக்கம்:

இந்த விபத்து, மெட்ரோ ரயில் பணிகளால் நடந்தது அல்ல. இந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சம்பவம் நடந்த இடத்தை, கடந்தாண்டு மே மாதத்தில் கடந்து, தற்போது, ஒரு கி.மீ., துாரம் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. எனவே, மெட்ரோ ரயில் பணிகளால் அதிர்வு நடக்கவும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement