மிரட்டிய இருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் புதுாரை சேர்ந்தவர் கருப்பையா மனைவி முத்துலட்சுமி 52. இவர் மகன் ரத்தீசுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கும் மதகுபட்டி ராமலிங்கபுரம் முருகன் 28 என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. ரத்தீசை தாக்கியதாக ஏற்கனவே நகர் போலீசில் முருகன் மீது புகார் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் மற்றும் நாலுகோட்டை பிரபுதேவன் 28 இருவரும் முத்துலட்சுமி வீட்டிற்கு சென்று ஏற்கனவே போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற கூறி ரத்தீஷ் மற்றும் அவரது தாயார் முத்துலட்சுமியை மிரட்டினர். முத்துலட்சுமி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் முருகன், பிரபுதேவனை கைது செய்தனர்.

Advertisement