ரிஷப் பந்த் சதம்: பெங்களூரு அணிக்கு 228 ரன் இலக்கு

லக்னோ: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி, 227 ரன் குவித்துள்ளது.
உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் 70-வது ஆட்டத்தில், லக்னோ அணியும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றுடன் லீக் சுற்றுகள் முடிவடைகின்றன.
பெங்களூரு அணி ஏற்கனவே, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட நிலையில்,இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு வரும்.
தோல்வியடைந்தால் குஜராத் அணி 2-வது இடத்தை உறுதி செய்யும். பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கும்.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மிச்செல் மார்ஷ், மாத்தீவ் ப்ரீட்ஸ்க் ஆட்டத்தை துவக்கினர்.
மாத்தீவ் ப்ரீட்ஸ்க் 12 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் எடுத்த நிலையில் துஷாரா பந்தில் போல்டாகி வெளியேறினார்.
மிச்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். அவர் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்து 67 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 13 ரன்களில் அவுட் ஆனார்.
ரிஷப் பந்த் அதிரடி சதம்:
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 54 பந்துகளில் 100 ரன்களை எட்டி சதம் அடித்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அவர் 61 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.
இறுதியில் லக்னோ அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன் எடுத்தது.
பெங்களூரு அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்குமார் மற்றும் துஷாரா தலா ஒரு விக்கெட் வீழத்தினர்.
இதனை தொடர்ந்து பெங்களூரு அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மேலும்
-
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்; ரோடு சேதம்
-
வீடுகளுக்குள் புகும் பாம்பு; சாக்கடை இன்றி தொற்று: சிரமத்தில் மல்லிகை நகர் குடியிருப்போர்
-
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக 35.50 லட்சம் வேட்டி, சேலை உற்பத்திக்கு உத்தரவு
-
'ஆச்சார்யா பஞ்சகச்சம்' வேட்டியை பிரபலப்படுத்தும் 'ராம்ராஜ் காட்டன்'
-
'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள்
-
இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்