சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

அம்பத்துார்,செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும், 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி, கடந்தாண்டு கோடை விடுமுறையில், எண்ணுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அதேபகுதியைச் சேர்ந்த நரேஷ், 21, என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நரேஷ் ஆசைவார்த்தை கூறி பலமுறை, சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

கடந்த மாதம் கோடை விடுமுறைக்கு எண்ணுார் சென்றபோதும், பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், அம்பத்துார் மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நரேஷை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement