'சாண்ட்விச்' மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

வடபழனி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி விக்னேஷ், 27. இவர், வடபழனி, திருநகர் 1வது தெருவில் உள்ள 'கேட்டரிங் சர்வீஸ்' நிறுவனத்தில், அங்கேயே தங்கி பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் இரவு, சாண்ட்விச் இயந்திரத்தை சரிசெய்துள்ளார்.

அப்போது அந்த இயந்திரத்தில் இருந்து, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, மருத்துவ பரிசோதனையில் ஹரி விக்னேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார், உடலை மீட்டு கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement