இரவில் 'பைக் ரேஸ்' ரகளை சைதையில் தடுப்பு முயற்சி

சென்னை :
சென்னை, சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை வளாகத்தின் வழியே, சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவக சாலையில், இரவு நேரத்தில், 'பைக் ரேஸ்' நடப்பதால், அவ்வழியே செல்ல அச்சமாக இருப்பதாக பாதசாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து, நம் நாளிதழில், இம்மாதம் 19ம் தேதி செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, சைதாப்பேட்டை போக்குவரத்து போலீசார், அப்பகுதியை கண்காணித்து, 'பைக்' ரேஸ் நடக்காத வகையில், தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:

சைதாப்பேட்டை எல்லைக்குட்பட்ட தாடண்டர் நகரில், ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் செயல்படும் அன்பழகன் மாளிகை வளாகத்தில், இரவு நேரங்களில், 'பைக்' ரேஸ் நடப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதைத்தொடர்ந்து, அன்பழகன் மாளிகை, பழைய கால்நடை மருத்துவமனை, பேன்பேட்டை சாலை ஆகியவற்றின் நுழைவு வாயில்களும், இரவு நேரங்களில் பூட்டி வைப்பது உறுதி செய்யப்படுகிறது.

மேலும், அந்நிய நபர்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு, தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

★★

Advertisement