ஆதார் மையத்தில் குவிந்த பெற்றோர்



ஈரோடு, பள்ளிகள் ஜூன், 2ல் திறக்கப்படுவதாக, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்தும் பணிகளில் பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, அரசின் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகை பெற, ஆதார் கார்டு இணைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிக்காக, ஆதார் மையங்களுக்கு மாணவ, மாணவியருடன் பெற்றோர் படையெடுத்து வருகின்றனர்.
இதனால் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் நேற்று கூட்டம் குவிந்தது.

Advertisement