ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு


ஈரோடு,ஈரோடு மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை ஜவுளி சந்தை நடந்தது. ஆயத்த ஆடை நிறுவனங்கள், பனியன், லுங்கி உள்ளிட் ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தற்காலிக கடைகள் அதிகமாக அமைத்திருந்தனர்.

சாலையோர கடைகள், வாகனங்கள், குடோன் விற்பனையும் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர்.


ஜவுளி விற்பனை குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படுவதால், பள்ளி யூனிபார்ம் துணிகள், தைத்து வைக்கப்பட்ட யூனிபார்ம் விற்பனை மற்றும் மாணவ, மாணவியருக்கான பனியன், ஜட்டி, இன்னர்வேர், காட்டன் துணிகள் அதிகம் விற்றன. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சில்லறை ஜவுளி விற்பனை, 40 சதவீதம் வரை நடந்தது. மொத்த ஜவுளி விற்பனை குறைவாகவே நடந்தது.
இவ்வாறு கூறினர்.

Advertisement