ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளிடம் நெடுஞ்சாலைத்துறை பெற்ற கையொப்பம்
குமாரபாளையம் குமாரபாளையத்தில், ஜூன் 6க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வியாபாரிகளிடம் நெடுஞ்சாலைத்துறையினர் கையொப்பம் பெற்றனர். குமாரபாளையம்
கத்தேரி பிரிவு முதல், பழைய காவேரி பாலம் வரை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சேலம் சாலையில், பல வியாபாரிகள் இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதில் பொதுமக்கள் பலரும் அடிபட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் ஜூன், 6ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு பகுதிகளை தாங்களாக அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதனை அகற்றும் பணிக்கான செலவை, ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்த வேண்டும் என, சுற்றறிக்கை மூலம் ஒவ்வொரு வியாபாரியிடமும் தெரிவித்து, கையொப்பம் பெறும் பணியை
துவக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடரி ஏரியில் மணல் கடத்திய 7 பேர் கைது
-
த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ் சமூக ஊடகப் பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
குளத்தில் தள்ளி தொழிலாளி கொலை உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
-
மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'
-
தி.மு.க., சார்பில் மாநில அளவில் 2ம் நாள் கபடி போட்டி
Advertisement
Advertisement