தி.கோட்டில் சப்-ஜூனியர் வுஷீ போட்டி துவக்கம்
திருச்செங்கோடு,திருச்செங்கோட்டில், 25வது சப்-ஜூனியர் வுஷீபோட்டி கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது.
தமிழ்நாடு வுஷீ அசோசியேசன் தலைவர் அலெக்ஸ் அப்பாவு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜான்சன் வரவேற்றார். அகில இந்திய வுஷீ அசோசியேஷன் முதன்மை அலுவலர் சுகைல் அகமத், நாமக்கல் மாவட்ட வுஷீ சங்க பொதுச்செயலாளர் கேசவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
சொன்ஸ் எனப்படும் பிரிவில் பன்ச், கேக் மற்றும் துரோகி முறையை பயன்படுத்தி போட்டி நடந்தது. டாலு எனப்படும் பிரிவில், தனிநபர் விளையாட்டு போட்டி நடந்தது. அர்ஜுனா விருது பெற்ற மணிப்பூரை சேர்ந்த விமோல் ஜித் வருகை தந்து, வீரர்களை உற்சாகப்படுத்தினார். இந்தியா முழுவதும் இருந்து, 1,500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 31ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.
மேலும்
-
மகன் மார்க் குறைவால் பெண் டாக்டர் தற்கொலை
-
பழங்குடியின வாலிபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: இருவர் கைது
-
8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு
-
பவானி ஆற்றில் சேறு கலந்த நீர்; குடிநீர் திட்டங்கள் பாதிப்பு
-
நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்': 8 மாவட்டங்களில் மழை தொடரும்
-
'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்': ஷேக் ஹசீனாவின் 'திக் திக்' நிமிடங்கள்