வெற்று உதார் உதயநிதி நயினார் நாகேந்திரன் கிண்டல்

கோவை: ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை, போலீஸ் துறையால் பராமரிக்க இயலவில்லை,'' என, தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'டாஸ்மாக்' ஊழல் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். இதில் தொடர்புடைய துணை முதல்வரின் நண்பர்கள் ரித்தீஷ், ஆகாஷ் லண்டன் ஆகியோர் சென்று விட்டதாக சொல்கிறார்கள்.
துணை முதல்வர் உதயநிதி 'ஈ.டி.,க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என அமலாக்கத்துறை ரெய்டு குறித்து சொல்கிறார். 2011ல் தேர்தல் நடந்தபோது, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, அறிவாலய மாடியில் ரெய்டு நடந்தது; கீழே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மட்டும் ரெய்டுக்கு பயந்து, பேச்சுவார்த்தை நடத்தினார்களா என தெரியவில்லை.
அப்போதிலிருந்தே உதயநிதிக்கு, ரெய்டு என்றாலே பயம்தான். அதனால்தான், இப்போதும் சோதனை குறித்து அலறலாக பேசிக் கொண்டிருக்கிறார். இருட்டில் போகும் மனிதன், பயத்தில் பாட்டுப்பாடி செல்வது போல, அமலாக்கத்துறை மட்டுமல்ல; யார் ரெய்டு என்றாலும், அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என பயந்துகொண்டே சொல்கிறார், வெற்று உதார் உதயநிதி.
ரித்தீஷும், ஆகாசும் அவருடைய நண்பர்கள் தானே. அவர்கள் ஏன், அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பின், வெளிநாட்டுக்கு ஓடினர். உதயநிதி இதற்கு என்ன பதில் சொல்வார்?
ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தேவைப்பட்டால் கொடுப்போம்.
தங்க நகை கடனுக்கு விதித்துள்ள, புதிய விதிமுறைகளால் ஏற்படும் சிக்கல்களை நிதியமைச்சரிடம் பேசி, விதிமுறைகளை எளிதாக்க முயற்சி செய்வோம்.
மதுரையில் ஜூன் மாதம், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலகம் முழுதும் இருந்து, பக்தர்கள் அந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். ஸ்டாலின் ஆட்சி விரட்டப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.





மேலும்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
-
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், நாளை 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்
-
தொடங்கியது அ.தி.மு.க., மா. செ. கூட்டம்; நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை
-
ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் நோக்கம்: ஓவைசி
-
பா.ம.க., இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்; ராஜினாமா கடிதத்தில் டுவிஸ்ட்