ஊராட்சி கூட்டமைப்பின் மூலம் தொழில் நிதி

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் தொழில் நிதி வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டாரத்திற்கு ஒரு ஊட்டச்சத்து, சுகாதார தொழில் நிறுவனம் அமைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் தொழில் நிதி வழங்கப்பட உள்ளது.

சிறுதானிய உணவுப் பொருட்களான திணை உணவுப்பொருட்கள், கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, ராகி கேக் மற்றும் பிஸ்கட், சிறுதானிய உருண்டை, சாமை குக்கீஸ், நியூட்ரி மிக்ஸ் பவுடர், நவதானிய லட்டுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சத்தான ஊட்டச்சத்து உணவு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தகுதியுள்ள சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் நிதி வழங்கப்பட உள்ளது.

அதனால் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் தயாரிக்கும் சுய உதவிக்குழுக்கள் தங்கள் கிராமத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டாரத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement