வைகாசி பொங்கல் கொடியேற்றம்

விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் முடிந்த நிலையில், நேற்று வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கலுக்கான கொடியேற்ற விழா நடந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு கொடியேற்றினர்.

மேலும் விழா நாட்களில் அம்மன் நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் எழுந்தருள்கிறார்.

ஜூன் 3ல் பொங்கல், ஜூன் 4ல் கயிறுகுத்து, அக்னிசட்டி, மே 5ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement