மேலுார்-காரைக்குடி சாலைப்பணி மந்தம்

காரைக்குடி: மேலுார் --- காரைக்குடி சாலைப் பணி 5 ஆண்டுகளாக மந்த கதியில் நடக்கிறது. காரைக்குடி - மேலுார் 45 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி 2020ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் வருகிறது.

இப்பணி 2 ஆண்டிற்குள் முடிக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. 4 ஆண்டை கடந்து 5 ஆண்டு துவங்கியும் பணி இதுவரை முடிவுக்கு வரவில்லை. 20 க்கும் மேற்பட்ட சுரங்க சாலைகள், 19 சிறிய பாலங்கள், 9 பெரிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

Advertisement