தண்ணீருக்கு அலையும் சானாவயல் மக்கள்

தேவகோட்டை : திடக்கோட்டை ஊராட்சி சானாவயல் கிராமம். இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் ஆறு மாதமாக குடிநீருக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். தொட்டியிலுள்ள குடிநீர் குழாய் உடைந்து பயனற்று கிடக்கிறது. மின் இணைப்பும்இல்லை. கிராமத்தினர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீருக்கு மக்கள் அலைகின்றனர்.

மேல்நிலைப் தொட்டி கட்டியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சானாவயல் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement