தேவகோட்டையில் முளைப்பாரி விழா

தேவகோட்டை : தேவகோட்டை மஞ்சள் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா 20 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

அம்மனுக்கு தினமும் மாலை அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து பூஜைகள் நடந்தன. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருப்பாக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பின் முளைப்பாரி திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி செலுத்தி வழிபட்டனர்.

Advertisement