கோர்ட் வளாகத்தில் மோதல்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே தேளியைச் சேர்ந்தவர் பொன்மணி 52, இவரது மனைவி காளீஸ்வரி 45, கணவன் , மனைவி இடையே 2022ல் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பூவந்தி போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் திருப்புவனம் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக பொன்மணி, காளீஸ்வரி, காளீஸ்வரியின் தம்பி பாக்யராஜ் 40 ஆகியோர் வந்திருந்தனர். கோர்ட் வளாகத்தில் திடீரென பாக்யராஜூம் பொன்மணியும் மோதி கொண்டனர். தகராறு தொடர்பாக கோர்ட் தலைமை எழுத்தர் சுகுமாறன் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் பொன்மணி, பாக்யராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement