மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு 11:00 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.
மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கி, இரவு 12:00 மணி வரை நடந்தது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர்.
பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் உட்பட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி