கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்; கோழிக்கோடு, வயநாட்டில் இன்று ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று (மே 28) 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் கேரளாவில் மழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று (மே 28) 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளா மற்றும் லட்சத்தீவில் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி