வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!

2

புதுடில்லி: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வடமேற்கு வங்கக்கடலில், ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி வரை பெய்த மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
சின்னகல்லாறு- 146

அவலாஞ்சி-142



சாம்ராஜ் எஸ்டேட் - 135


அப்பர் பவானி 129
நாலுமுக்கு-126



ஊத்து-120


கட்டாச்சி- 118


சோலையாறு-105
மாஞ்சோலை-102

குந்தா பாலம்- 96



பாபநாசம்- 82


பெரியாறு-73
சேர்வலாறு அணை -72



சிறுவாணி அடிவாரம்- 70
நடுவட்டம்-68

கிளன்மார்கன்-66



மாக்கினாம் பட்டி- 65.6
பொள்ளாச்சி தாலுகா ஆபீஸ்-64



எமரால்டு 64


வால்பாறை பி.ஏ.பி.,-64
வால்பாறை தாலுகா-61



தேவாலா-59
அப்பர் கூடலூர்-56



கூடலூர் பஜார்-53


சின்கோனா-50


ஊட்டி-48.9


கொடுமுடி ஆறு அணை-47


குண்டாறு அணை-46


ராமநதி அணை-39

Advertisement