வீடு புகுந்து பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை ராணிப்பேட்டையில் வாலிபர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள், கத்தியால் குத்திய வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சோளிங்கர் அருகே புலிவலம் என்ற கிராமத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவி ஒருவரை வாலிபர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற மற்றொரு மாணவிக்கு கத்திக்குத்து விழுந்தது..
மாணவிகள் கூக்குரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் கத்தியால் குத்திய வாலிபரையும் உடன் வந்த மற்றொருவரையும் பிடிக்க முயற்சித்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே சிக்க, அவரை போலீசில் ஒப்படைத்தனர். கத்தியால் குத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார்.
.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததுடன், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.









