மூன்றாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் பெகுலா, இத்தாலியின் சின்னர் உள்ளிட்டோர் முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதினர். சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 என சகவீராங்கனை ஆன் லியை வென்றார். ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஷ்லினை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-0, 6-4 என பிரான்சின் ரிச்சர்ட் காஸ்குயட்டை வென்றார். மற்றொரு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-6, 6-1, 6-2, 6-3 என நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை வீழ்த்தினார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ஜாம் முனார் தோல்வியடைந்தனர்.
இந்திய ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி 7-6, 5-7, 6-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் ராபர்ட் கேஷ், ஜேஜே டிரேசி ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி 6-3, 6-7, 6-3 என நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், ஜெர்மனியின் ஹென்டிரிக் ஜெபென்ஸ் ஜோடியை வென்றது.
இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுயல் ரெய்ஸ்-வரேலா ஜோடி 6-2, 6-1 என சீனாவின் யுன்சாவோகெட், அர்ஜென்டினாவின் கேமிலோ உகோ காராபெல்லி ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
மேலும்
-
பா.ம.க.,வில் நிலவும் குழப்பம் தற்காலிகமானது; சரிப்படுத்தி விடுவேன் என்கிறார் அன்புமணி
-
அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்
-
வேன் மீது கார் மோதல்: 2 பேர் பலி
-
ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
-
இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு
-
செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்