தாய்லாந்து குத்துச்சண்டை: நமன் அபாரம்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் நமன் தன்வர் (90 கிலோ), அன்ஷுல் கில் (+90 கிலோ) முன்னேறினர்.
தாய்லாந்தில், சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நமன் தன்வர், உஸ்பெகிஸ்தானின் ஜூராபோவ் எலியோர்பெக் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நமன் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
பின், 90+ கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்ஷுல் கில், உஸ்பெகிஸ்தானின் ருஸ்டமோவ் அப்துராக்மோன் மோதினர். இதில் அசத்திய அன்ஷுல் 3-2 என 'திரில்' வெற்றி பெற்றார்.
பெண்களுக்கான அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் தமன்னா (51 கிலோ), லால்பாக்மாவி (80 கிலோ), பிரியா (57 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்
-
வேன் மீது கார் மோதல்: 2 பேர் பலி
-
ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
-
இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு
-
செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்
-
ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்
Advertisement
Advertisement