நடராஜர் கோவிலுக்கு ரூ. 13 லட்சம் பூஜை பொருள்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான வெள்ளி பூஜை பொருட்களை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்டது.
உலக புகழ் பெற்ற கடலுார் மாவட்டம், சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலுக்கு 6 கால பூஜைகளுக்கு பயன்படுத்த மேருதீபம், வெண்சாமரம், நட்சத்திர தீபம், நகா தீபம், வியாக்ரதீபம், கும்ப தீபம் உள்ளிட்ட 16 வெள்ளி பூஜை பொருட்களை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள நேற்று முன்தினம் வழங்கினார்.
இதனை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவசந்தர தீட்சிதர் பெற்றுக் கொண்டார். 11 கிலோ 500 கிராம் எடை இதன் மதிப்பு 13 லட்சம் ரூபாய் ஆகும். திருவாவடுதுறை ஆதீன கட்டளைதாரர் நடராஜ ரத்தின தீட்சிதர் பலர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல் குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மனு
-
கோடை விடுமுறை நிறைவு: பள்ளிகளில் துாய்மை பணி
-
கோவிலில் தாலி செயின் பறித்த வட மாநில பெண் கைது
-
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்
-
முத்தனுார் வருண கணபதி கோவிலில் சதுர்த்தி பூஜை
-
கருட வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
Advertisement
Advertisement