மெட்ராஸ் போஸ்டல் அணி டிவிஷன் கால்பந்தில் வெற்றி
சென்னை:சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, பேசின் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கிறது.
அந்த வகையில், நேற்று நடந்த போட்டியில் மெட்ராஸ் போஸ்டல் அணி, சாய் அணியுடன் மோதியது.
இதில் மெட்ராஸ் போஸ்டல் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில், சாய் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
மெட்ராஸ் போஸ்டல் அணி சார்பில், பவளவண்ணன் ஒன்பதாவது மற்றும் 11வது நிமிடத்தில் தன் அணிக்காக இரண்டு கோல் அடித்து அசத்தினார்.
மேலும், சரவணகுமார் 37வது நிமிடம்; கிருஷ்ணகுமார் 39வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.
சாய் அணி சார்பில் உபேந்திரா, ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு கோல், வினோத் 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, தன் அணிக்கு ஆறுதல் அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பை விமான நிலையத்தில் பயணியிடம் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்!
-
பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டி: மும்பை அணி பேட்டிங்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
Advertisement
Advertisement