கேளிக்கை வரி குறைப்பு திரைத்துறையினர் மகிழ்ச்சி
சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும், எட்டு சதவீத கேளிக்கை வரி, நான்கு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, திரைத்துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் படங்கள், 200க்கும் மேல் வெளியாகின்றன. மற்ற மொழி படங்கள், 100க்கும் மேல் வெளியாகின்றன. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியாக, 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என, திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதை பரிசீலனை செய்த தமிழக அரசு, எட்டு சதவீதம் கேளிக்கை வரியை, நான்கு சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர்: புதிய தமிழ் படங்களுக்கு, தற்போதுள்ள, எட்டு சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரி, நான்கு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பழைய தமிழ் படங்களுக்கு தற்போதுள்ள ஏழு சதவீத வரி, 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கும், முன்னெடுத்த கமலுக்கும் நன்றி.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்: தமிழ் திரைத்துறை, சமீப காலமாக எதிர்கொண்டு வரும் மிகக் கடினமான காலகட்டத்தில், இந்த வரி குறைப்பு, தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் மொபைல் போன்களில், செயலிகளில் படங்களை காண பழகி வரும் ரசிகர்களை, தியேட்டர் நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல முகாந்திரமாகவும் அமையும்.
மேலும்
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி