சென்னை அணி ஏமாற்றம் * அல்டிமேட் டேபிள் டென்னிசில்...

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை, ஜெய்ப்பூர் அணிகள் மோதின.
ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையின் கிரில் கெராசிமென்கோ 0-3 என ஜெய்ப்பூர் வீரர் கானக் ஷாவிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 3-0 என சென்னையின் பொய்மந்தீயை வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் போட்டியில் சென்னையின் பான் சிகி, பயாஸ் ஜெயின் ஜோடி, 1-2 என ஸ்ரீஜா, கானக் ஜோடியிடம் தோற்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையின் பயாஸ் ஜெயின் 3-0 என யாஷன்சை வென்றார். அடுத்து நடந்த பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையின் பான் சிகி 2-1 என பிரிட் எர்லாந்தை வீழ்த்தினார். முடிவில் சென்னை அணி 6-9 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Advertisement