சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்கள்

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது.
இதற்காக இரு அணி வீரர்களும் ஓட்டலில் இருந்து இரு பஸ்சில், 3.5 கி.மீ., துாரத்தில் உள்ள ஓவல் (தெற்கு லண்டன்) மைதானத்துக்கு கிளம்பினர். அப்போது போக்குவரத்து நெரிசலில் பஸ் சிக்கிக் கொண்டது.
உடனடியாக சைக்கிளில் கிளம்பிய இங்கிலாந்து அணி வீரர்கள், முன்னதாக மைதானம் வந்தடைந்தனர். மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், பஸ்சில் தாமதமாக வந்து சேர்ந்தனர். இதனால் 'டாஸ்' நிகழ்வு 40 நிமிடம் தாமதம் ஆனது. 30 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து, பீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (16), எவின் லீவிஸ் (8) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கேப்டன் ஷாய் ஹோப் 'டக்' அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவரில் 83/3 ரன் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மீண்டும் போட்டி துவங்கியது. தலா 40 ஓவர்களாக மாற்றப்பட்டது. ஸ்டெபானே ரூதர்போர்டு, அரைசதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஓவரில் 148/6 ரன் எடுத்திருந்தது.

Advertisement