நார்வே செஸ்; முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
நார்வேவின் ஸ்டாவஞ்சர் நகரில் சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, தனது 8வது சுற்றில் 5 முறை சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜூ வென்ஜூனை வைஷாலி தோற்கடித்து அசத்தினார்.
உலக சாம்பியனான வென்ஜூனை வைஷாலி தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், 6 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் வைஷாலி 5வது இடத்தில் உள்ளார். இவர் சீனாவின் லெய் டிங்ஜியை விட அரை புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நார்வே செஸ் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக சாம்பியனான நார்வேவின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும்
-
திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!
-
வங்கதேசத்தில் ஏப்ரல் 2026ல் தேர்தல்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த யூனுஸ்
-
டிரம்பின் அதிபர் பதவியை துணை அதிபருக்கு கொடுக்க மஸ்க் விருப்பம்; ஜே.டி வான்ஸ் பதில் இதுதான்!
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்
-
நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு