ஸ்ரீ மகாலட்சுமி ஹார்டுவேர்ஸ் எலக்ட்ரிக்கல்ஸ் ஷோரூம் திறப்பு

விழுப்புரம் : விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் இ.எஸ்., மருத்துவமனை அருகில், ஸ்ரீ மகாலட்சுமி ஹார்டுவேர்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு ஜெயராமன் - ராஜாமணி தலைமை தாங்கி புதிய ஷோரூமை திறந்து வைத்தனர். திருச்சி வி.எஸ்., குரூப்ஸ் உரிமையாளர் சரவணன், ஆர்பிட் நிறுவன தலைவர் அமித்அகர்வால் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஜஷ்வந்த்குமார், அனுஸ்ரீ வரவேற்றனர்.

விழுப்புரம் வி.ஆர்.எஸ்., கல்விக்குழும தாளாளர் சரவணன் முதல் விற்பனையை துவக்கி வைக்க, விழுப்புரம் வணிகர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்நாத் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, பேரிவேர் ஷோரூமை அந்நிறுவன மண்டல விற்பனை மேலாளர் செந்தில்நாதன், பூபா ஷோரூமை அந்நிறுவன தலைவர் புஷ்பராஜன், டைரான் ஷோரூமை விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா திறந்து வைத்தனர்.

விழுப்புரம் வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், மகாலட்சுமி குழும உரிமையாளர் பிரகாஷ், மாவட்ட சிவில் இன்ஜினியர் வெல்பர் அசோசியேஷன் தலைவர் பாபுராஜ், வர்ஷா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் அரங்க திருமாறன், ஆடிட்டர் ராஜேஷ்குமார், உட்லண்ட் ஓட்டல் உரிமையாளர் முரளி, விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், மருத்துவப்பணிகள் (காசநோய்) துணை இயக்குனர் சுதாகர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி இணை பேராசிரியர் அஞ்சன் ராமச்சந்திரநாத் உட்பட முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ மகாலட்சுமி ஹார்டு வேர்ஸ் அண்ட் எலக்ட்ரிக் கல்ஸ் உரிமையாளர் மோகன் - ராஜலட்சுமி நன்றி கூறினர்.

Advertisement