முதுகுளத்துாரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி குழாய்களில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது

முதுகுளத்துார் : முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகிறது. இதேபோன்று முதுகுளத்துார் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார் பகுதியில் ரோட்டோரத்தில் காவிரி குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் முதுகுளத்துார் பரமக்குடி ரோடு மகிண்டி, கீழத்துாவல் அருகே கடந்த சில நாட்களாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
குடிநீர் எந்தவித பயன்பாடின்றி ரோட்டோர வீடுகளை சுற்றி குளம்போல் தேங்கியுள்ளது.
குழாய் உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போன்று முதுகுளத்துார் -கடலாடி ரோடு முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
எனவே காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது