தொடரை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம்

பிரிஸ்டோல்: இரண்டாவது 'டி-20' போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. பிரிஸ்டோலில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 'பவுலிங்' தேர்வு செய்தார்.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (47), கேப்டன் ஷாய் ஹோப் (49) நம்பிக்கை தந்தனர். ராவ்மன் பாவெல் (34), ஜேசன் ஹோல்டர் (29*) ஓரளவு கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் லுக் உட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (30), பட்லர் (47), கேப்டன் ஹாரி புரூக் (34) நம்பிக்கை கொடுத்தனர். ஜேக்கப் பெத்தேல் (26), டாம் பான்டன் (30*) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 18.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement