லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

லண்டன்: தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆஸி., அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், ' நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன்கள் எடுத்தன.

4வது ஆட்ட நாள் துவங்கியதும் பவுமா, கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து 66 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டிரிஸ்ட்ன் ஸ்டப்ஸ் 8 ரன்களிலும் அவுட்டாகினர்.
இருப்பினும் மார்க்ரம், டேவிட் பெடின்ஹம் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். மார்க்ரம் 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
@block_B@ கடந்த 27 ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எந்த ஐ.சி.சி., நடத்தும் எந்தவொரு தொடரிலும் வென்றது கிடையாது. தற்போது முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.block_B
வாசகர் கருத்து (7)
வல்லவன் - ,
14 ஜூன்,2025 - 21:58 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
14 ஜூன்,2025 - 21:56 Report Abuse

0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
14 ஜூன்,2025 - 20:58 Report Abuse

0
0
Reply
sarvesh - ,
14 ஜூன்,2025 - 20:23 Report Abuse

0
0
Reply
TR BALACHANDER - erode,இந்தியா
14 ஜூன்,2025 - 18:59 Report Abuse

0
0
Reply
Naresh Kumar - ,
14 ஜூன்,2025 - 18:07 Report Abuse

0
0
Reply
lana - ,
14 ஜூன்,2025 - 17:39 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஒன்றிய அலுவலகத்தில் சேதமான கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
-
விவசாய மின் கட்டண மானியமாக ரூ.15,785 கோடி வழங்கியது அரசு
-
ரோட்டுல பாதியை காணோம்
-
தேசிய லோக் அதாலத் 2 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு
-
குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் 14.5 சவரன் கொள்ளை
-
46,350 டன் அரிசியை கொள்முதல் செய்ய டெண்டர் கோரிய காண்பெட் நிறுவனம்
Advertisement
Advertisement