இங்கிலாந்தை சமாளிக்குமா இந்தியா: ஸ்டைன் கணிப்பு எப்படி

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என கைப்பற்றும், என தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் கணித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 20ல், லீட்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2---6), லார்ட்ஸ் (ஜூலை 10---14), மான்செஸ்டர் (ஜூலை 23---27), ஓவலில் (ஜூலை 31 --- ஆக. 4) நடக்கவுள்ளன. சீனியர் வீரர்களான ரோகித், கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதால், இத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.


இதுகுறித்து முன்னாள் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன் கூறுகையில், ''இத்தொடரின் ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும். எந்த ஒரு அணியும் வெற்றியை எளிதில் விட்டுக்கொடுக்காது. இந்திய அணி 2 டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால், தொடரை 3-2 எனக் கைப்பற்றலாம்,'' என்றார்.

Advertisement