கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ்: அயர்லாந்து அணி ஏமாற்றம்

பிரெட்டி: மூன்றாவது 'டி-20' போட்டியில் 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. அயர்லாந்து அணி ஏமாற்றியது.
அயர்லாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டி மழையால் கைவிடப்பட்டது. மூன்றாவது போட்டி பிரெட்டியில் நடந்தது. 'டாஸ்' வென்ற அயர்லாந்து அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (91), கேப்டன் ஷாய் ஹோப் (51) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஹெட்மயர் (15), ஜேசன் ஹோல்டர் (18) நிலைக்கவில்லை. 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. கீசி கார்டி (49), ரொமாரியோ ஷெப்பர்டு (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு ராஸ் அடேர் (48), ஹாரி டெக்டர் (38) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் பால் ஸ்டிர்லிங் (13) உள்ளிட்ட மற்றவர்கள் சோபிக்கவில்லை. அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்து தோல்வியடைந்தது. மார்க் அடேர் (31), லியாம் மெக்கார்த்தி (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
போராட்டத்தில் ஈடுபடும் காஸ் பிளான்ட் தொழிலாளர்களை பணிக்கு அழைக்க முடிவு
-
வணிக வளாக கடைகளுக்கு ரூ.15 லட்சம் டிபாசிட் கேட்பதால் நா.த.க., ஆர்ப்பாட்டம்
-
சோதனைச்சாவடியை அகற்றியதால் எல்லையில் குற்றச்செயல் அதிகரிப்பு
-
சிறுவனுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்
-
சங்ககிரி அருகே அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம் மீட்பு
-
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்