பெங்களூரின் மொத்த நடைபாதை 2.9 கி.மீ., தான்

பெங்களூரு: 'பெங்களூரு நகரில் உள்ள 1,671 கி.மீ., நீளமுள்ள சாலைகளில் வெறும் 2.9 கி.மீ., நீளமே நடைபாதை உள்ளது' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு நகரம் 14,000 கி.மீ., நீளமுடைய சாலை வலையமைப்பை கொண்டுள்ளது. இவற்றில், நகரத்தின் மையப்பகுதியில் எப்போதும் அதிக போக்குவரத்து நெரிசலுடைய முக்கிய சாலைகளும், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் துணை சாலைகளும் அடங்கும். இந்த இரு சாலைகளின் மொத்த நீளம் 1,671 கி.மீ., ஆகும்.

ஆனால், இந்த சாலைகளில் நடைபாதை வாசிகளுக்கான நடைபாதை பெரும்பாலும் இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம். நகர வலையமைப்பில் ஒட்டுமொத்தமாக 100 மீட்டருக்கு வெறும் 17 செ.மீ., என்ற விகிதத்திலேயே நடைபாதை இருப்பதாக மாநகராட்சியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது நகரில் உள்ள 700 முக்கியமான சாலைகளில் 2.9 கி.மீ., நீளத்திற்கு மட்டுமே பாதசாரிகள் நடப்பதற்கான தனித்துவமான நடைபாதை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதி முக்கிய சாலைகளின் நிலையே இந்த நிலையில் இருக்கும்போது, மற்ற சாலைகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Advertisement