ரத்த சோகை தினத்தை முன்னிட்டு மருத்துவ கல்லுாரி மாணவியர் பேரணி
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ரத்த சோகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மருத்துவக் கல்லுாரி டீன் லோகநாயகி தொடங்கி வைத்தார். அரிவாள் செல் ரத்த சோகை, மரபணு மாற்றத்தால் வரும் ஒருவகை ரத்த கோளாறு, மன அழுத்தம், அதிக உயரம் ஆகிய காரணிகளால், நோயின் வீரியம் அதிகரிக்கும். சோர்வு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, கைகால் வீக்கம், பக்கவாதம் மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.
இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாக இருக்கும். அரிவாள் செல் நெருக்கடி, ஒரு அபாயகரமான நிலையாகும். பல நேரங்களில், இந்த நெருக்கடியில் மோசமான நுரையீரல் தொற்று மற்றும் மண்ணீரல் செயலிழப்பு ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயை உயர் செயல் திறன் கொண்ட திரவ 'குரோமட்டோகிராபி' என்ற சோதனை மூலம் கண்டறியலாம்.பேரணியில், மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர் ராஜா, குழந்தைகள் நல மருத்துவத்துறை இணை பேராசிரியர்கள் காஞ்சனா, வித்யாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
-
ஆர்ப்பரித்த அதிரப்பள்ளி அருவி தொலைவில் இருந்து ரசிக்கலாம்
-
முருக பக்தர்கள் மாநாடு: கின்னஸ் சாதனை படைக்க திட்டம்
-
சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்
-
மா.செ.,க்களுடன் 24, 25ல் பழனிசாமி ஆலோசனை
-
அன்புமணி கூட்டு பிரார்த்தனை எம்.எல்.ஏ.,க்கள் 'டிஸ்சார்ஜ்'