ஈரானுக்கு எதிரான போருக்கு ஒருநாள் செலவு ரூ. 8,659 கோடி: வெளியான புதிய தகவல்

ஜெரூசலேம்: ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கு இஸ்ரேல் நாள்தோறும் செலவிடும் தொகை எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்னமும் ஓயவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கும் சூழல் காணப்படுகிறது.
இந் நிலையில், போர் தீவிரம் அடைந்து வரும் தருணத்தில், போருக்காக அந்நாடு மேற்கொண்டு செலவு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்நாட்டின் நிதி இழப்பானது, மேலும், மேலும் தாங்க முடியாத அளவுக்கு சென்று விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் கூறி இருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது;
இப்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,659 கோடி) செலவாகிறது. இவை அனைத்தும் ராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது. முதல் 48 மணி நேர போருக்கு மட்டும் ரூ.12,035 கோடி செலவு பிடித்துள்ளது.
வான்வழி தாக்குதல்கள், வெடிமருந்துகள், போர் விமானங்களுக்கு ஆன செலவு தனி. இந்த செலவுகள் அனைத்தும் நேரடியான செலவினங்கள். பொதுமக்களின் உட்கட்டமைப்பு சேதமானது, உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணக்கில் சேர்க்கவில்லை. இவை எல்லாம் மறைமுக செலவினங்கள் என்பதால் முழுமையாக மதிப்பிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.












மேலும்
-
ஈரான் - இஸ்ரேல் போரில் டிரம்ப் 2 வார காத்திருப்பின் அர்த்தம்; வெளியான புதிய பின்னணி
-
7ம் நாளாக இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்; காரணம் இதுதான்!
-
டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்
-
இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு
-
பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்
-
புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு