இன்டர் மயாமி அணி வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

அட்லாண்டா: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்து கைகொடுக்க, இன்டர் மயாமி அணி 2-1 என போர்டோ அணியை வென்றது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
அட்லாண்டாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்டர் மயாமி (அமெரிக்கா), போர்டோ (போர்ச்சுகல்) அணிகள் மோதின. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் போர்டோ அணியின் சாமு ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் போர்டோ அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மயாமி அணிக்கு 47வது நிமிடத்தில் செகோவியா பெரெஸ் ஒரு கோல் அடித்தார். பின், 54வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் இன்டர் மயாமி அணி 2-1 என முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பால்மீராஸ் (பிரேசில்) அணி 2-0 என, அல்-அஹ்லி (எகிப்து) அணியை வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது.
மாட்ரிட் வெற்றி: சியாட்டிலில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் (அமெரிக்கா), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின. இதில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 3-1 என, முதல் வெற்றியை பதிவு செய்தது.
லாஸ் ஏஞ்சல்சில் நடந்த மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் பாரிஸ்-செயின்ட்ன ஜெர்மைன் (பிரான்ஸ்) அணி 0-1 என போடாபோகோ (பிரேசில்) அணியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
5 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை
-
பெண்ணுடன் பேசிய இளைஞரை கட்டி வைத்து தாக்குதல் * பெண் தற்கொலை * எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மூவர் கைது
-
பூஜை செய்த வேலுடன் மாநாட்டுக்கு வாங்க: நாகேந்திரன்
-
ரூ.14.30 லட்சம் மோசடி கோவை தம்பதி சிக்கினர்
-
மழை குறைந்து காற்றின் வேகம் தணிந்தது குமரியில் கடலில் குளிக்க அனுமதி
-
ராமேஸ்வரத்தில் சிக்கிய 120 டன் இறால் மீன்கள் விலை கிடைக்காததால் மீனவர்கள் அதிருப்தி