மாநாட்டிற்காக மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் ரிங் ரோட்டில் வாகனங்களுக்கு தடை
மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே இன்று(ஜூன் 22) ஹிந்து முன்னணி சார்பில் நடக்கும் முருகபக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ராமநாதபுரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டி கோயில் சந்திப்பு, பி.சி பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான், விரகனுார் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
* கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ்கள் விரகனுார் சந்திப்பிலிருந்து புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே. கே. நகர் ஆர்ச் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி செல்ல வேண்டும்.
சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மாற்று பாதை
* மேலுார் ரோட்டில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனுார் சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.
* கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மேலுார் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம் கப்பலுார் சந்திப்பில் இருந்து ரிங் ரோடு வழியாக தேனி ரோடு சந்திப்பு, சமயநல்லுார் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்லவேண்டும்.
கார், டூவீலர்கள் செல்ல வேண்டிய மாற்றுப்பாதை
* மதுரை நகரில் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து விழா நடக்கும் இடம் வழியாக விரகனுார் ரவுண்டானா சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்கள் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனுார் ரவுண்டானா செல்ல வேண்டும்.
* மேலுார் ரோட்டில் இருந்து நேரடியாக திருமங்கலம், விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, அருப்புக்கோட்டைக்கு செல்லும் வாகனங்கள் மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லுார் ரோடு வழியாக தனிச்சியம் சந்திப்பிற்கு சென்று கப்பலுார் ரிங் ரோட்டிற்கு செல்ல வேண்டும்.
* திருமங்கலம், அருப்புக்கோட்டை ரோட்டில் இருந்து விரகனுார், பாண்டி கோயில் ரிங் ரோடு வழியாக நேரடியாக மேலுார் மார்க்கமாக திருச்சி, சென்னை செல்லக்கூடிய வாகனங்கள் கப்பலுார் நான்கு வழிச்சாலை வழியாக துவரிமான், சமயநல்லுார் சுற்றுச்சாலை வழியாக திண்டுக்கல் ரோடு, தனிச்சியம் பிரிவு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அலங்காநல்லுார் ரோடு வழியாக மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பிற்கு செல்ல வேண்டும்.
* விரகனுார் ரவுண்டானா சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மேலுார் செல்லக்கூடிய வாகனங்கள் விரகனுார் ரவுண்டானா சந்திப்பில் இடது புறம் திரும்பி புதிய தென்கரை சாலை, குருவிக்காரன்சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகர் ஆர்ச் வழியாக செல்ல வேண்டும்.
மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களின் வழித்தடங்கள்
* திருமங்கலம் மார்க்கமாக வரும் வாகனங்கள் கப்பலுார் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலா நகர் ரிங்ரோடு, விரகனுார் ரவுண்டானா வழியாக வரவேண்டும்.
* உசிலம்பட்டி ரோடு மார்க்கமாக வரும் வாகனங்கள் நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோட்டின் வலதுபுறம் திரும்பி திருமங்கலம் கப்பலுார் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலா நகர் ரிங்ரோடு, விரகனுார் ரவுண்டானா வழியாக வரவேண்டும்.
* கொட்டாம்பட்டி, மேலுார் ரோடு மார்க்கமாக வரும் வாகனங்கள் ஒத்தக்கடை ரிங்ரோடு, பி.சி பெருங்காயம் சந்திப்பு வழியாக வரவேண்டும்.
* திண்டுக்கல் - வாடிப்பட்டி மார்க்கமாக வரும் வாகனங்கள் சமயநல்லுார், துவரிமான் சுற்றுசாலை வழியாக கப்பலுார் பாலம் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலா நகர் ரிங்ரோடு, விரகனுார் ரவுண்டானா வழியாக வரவேண்டும்.
* நத்தம், அழகர் கோவில் மார்க்கமாக வரும் வாகனங்கள் கடச்சனேந்தல், சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி ரோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டி கோயில் ரிங்ரோடு வழியாக வர வேண்டும்.