தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜூன் 27 வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல் 27ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னையில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 27ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement